Categories
தேசிய செய்திகள்

“பொது இடங்களில் சார்ஜ் போடக்கூடாது” மீறினால் ஆபத்து…. காவல்துறையினரின் திடீர் எச்சரிக்கை…..!!!!!

பொது இடங்களில் சார்ஜ் போட வேண்டாம் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இந்தியாவில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் பொது இடங்களில் ஃபோனை சார்ஜ் போட வேண்டாம் என ஒடிசா காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பொதுமக்கள் பொது இடங்களில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன் மற்றும் யுஎஸ்பி பவர் ஸ்டேஷன் போன்றவைகளில் சார்ஜ் போடுவார்கள். இப்படி பொது இடங்களில் சார்ஜ் போடுவதால் சைபர் குற்றவாளிகள் யுஎஸ்பி சார்ஜ்  கனெக்டர்கள் மூலம் செல்போனில் இருக்கும் தனிப்பட்ட தகவல்களை திருடுகின்றனர்.

அதோடு மால்வேரை என்ற வைரசையும் செல்போனில் புகுத்தி விடுகின்றனர். இதனால் செல்போன்களும் வீணாகிவிடும். மேலும் இதுபோன்ற பிரச்சினைகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால் பொது இடங்களில் சார்ஜ் போடுவதை தவிர்க்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |