வடசென்னையில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா சார்பாக நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நம்முடைய இயக்கத்தினுடைய தலைவர் அவருடைய வேண்டுகோளை ஏற்று, திராவிட முன்னேற்றக் கழகம் என்பது அரசியல் கட்சி என்று சொல்லுவதைக் காட்டிலும், அது மக்களுக்கான இயக்கம் என்பதை ஒவ்வொரு நாளும் இந்த திராவிட மாடல் ஆட்சி, அதை நிரூபித்துக் கொண்டிருக்கும் என்று சொன்னால் அது மிகையாகாது.
அந்த வகையில் இது போன்ற விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு இருக்கின்ற உங்களையெல்லாம் மேம்படுத்த வேண்டும் என்கின்ற அந்த பணியில் தான், இன்றைக்கு பல மாற்றங்களை விளையாட்டு துறையில் முதலமைச்சர்களின் உருவாக்கிக் கொண்டிருக்கிறார். விளையாட்டுத்துறை என்று வரும்போது, ஒவ்வொரு தொகுதிக்கும் உள்விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்கின்ற அந்த அறிவிப்பாக இருந்தாலும்,
தங்கம் தேடுதல் என்கின்ற திட்டத்தின் மூலமாக ஒலிம்பிக் வரை சென்று, முதல் பரிசை பெறுகின்ற போட்டியாளர்களுக்கு ”தங்கம்” பரிசாக வழங்குவதாக இருந்தாலும், மூன்று கோடி ரூபாய் மதிப்புள்ள பணத்தை வழங்குவதாக இருந்தாலும், வெள்ளிப்பதக்கம் என்று சொன்னால் 2 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த பரிசாக இருந்தாலும், வெண்கலம் என்கின்ற போது ஒரு கோடி ரூபாய் பரிசு என்று நம்முடைய மாநில முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்கள்.
அதற்கு ஏறத்தாழ 25 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. ஏன் இங்கே கூட நம்முடைய கலாநிதி வீராசாமி அவர்கள் பேசும்போதுகூட சொன்னார், முதலமைச்சர் ஏறத்தாழ ஒரு பத்து கோடி ரூபாயை வடச்சென்னைக்கு என்று தனியாக ஒதுக்கீடு செய்து இருக்கிறார்கள். அது மட்டுமல்லாமல் இன்னும் 15 கோடி ரூபாவாக உயர்த்த வேண்டும் என்கின்ற அந்த அறிவிப்பையும் அவர் வழங்கி இருக்கிறார் என்று சொல்லும்பொழுது…
விளையாட்டுத் துறையின் மீது அந்த அளவுக்கு அதிகப்படியாக கவனத்தை செலுத்துகின்ற அரசாங்கம் நம்முடைய தளபதி அரசாங்கம் விளங்கிக் கொண்டிருக்கிறது. இதன் தொடர்ச்சியாகத்தான் இன்றைக்கு இந்த போட்டியில் கலந்து கொண்டு பரிசு பெற வருகை தருகின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்தார்.