Categories
உலக செய்திகள்

நாய் உணவை சாப்பிட்டால் 5 லட்சம்…. இங்கிலாந்து நிறுவனம் அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் இருக்கும் ஒரு நிறுவனம் ஒரு நபர் 5 நாட்களுக்கு நாய் உணவை உண்டால் 5 லட்சம் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் இயங்கும் ஆம்னி என்னும் நிறுவனம் தங்கள் நிறுவன தயாரிப்பான நாய் உணவை சாப்பிட்டு அதுகுறித்த விவரங்களை தருபவர்களுக்கு ஊதியம் வழங்குகிறது. அந்த நிறுவனம் தாவர அடிப்படையிலான உணவை தயாரித்திருக்கிறது. அந்த உணவில் இனிப்பு உருளைக்கிழங்குகள், பூசணிக்காய், பருப்புகள், காய்கறி மற்றும் பழுப்பு அரிசி ஆகியவை சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த பணிக்கு வருபவர்கள் நாய் உணவை உண்டால் எந்த ஒவ்வாமையும் ஏற்படாது என்று உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும் ஒவ்வாமை ஏற்படும் பட்சத்தில், அது குறித்த விவரங்களை வெளியிட வேண்டும். அதன்படி, ஒரு நபர் 5 நாட்கள் நாய் உணவை உண்ண வேண்டும். அதன் பிறகு, அந்த உணவின் சுவை எவ்வாறு இருக்கிறது? அந்த நபரின் மனநிலை, ஆற்றல் அளவு போன்றவற்றை தெரிவிக்க வேண்டும். இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் இங்கிலாந்து நாட்டவராகவும், 18 வயது நிரம்பியவராகவும் இருக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |