லேப்ரடார் வகையைச் சேர்ந்த ஒரு நாய் தன் உரிமையாளர் செய்யும் ஆறு யோகா நிலைகளை செய்து ஆச்சர்யப்படுத்துகிறது.
மேக்னஸ் என்ற அந்த நாய் தன் உரிமையாளர் செய்யும் யோகா நிலைகளை அழகாக செய்து காட்டுகிறது. அந்த வீடியோ தற்போது, இணையதளங்களில் வைரலாக பரவிக் கொண்டிருக்கிறது.
https://www.instagram.com/p/CZ3zV-OFLCn/
அதில் ஒரு பெண், யோகா விரிப்பை தரையில் விரிக்கிறார். அதனுடன் சேர்த்து தன் செல்ல பிராணிக்கும் மற்றொரு யோகா விரிப்பை விரிக்கிறார். அதன்பின் அவர் அமர்ந்திருக்கும் அதே நிலையில், மேக்னஸும் அவரை நோக்கி அமர்ந்திருக்கிறது. அதனைத்தொடர்ந்து, அவர் செய்யும் யோகா நிலைகளை அப்படியே செய்து காட்டி அசத்தியிருக்கிறது மேக்னஸ்.