Categories
அரசியல் மாநில செய்திகள்

திருமாவளவனுக்கு தைரியம் இருக்கா ? என்கிட்ட ஆதாரம் இருக்கு… சவால்விட்ட எச்.ராஜா …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, வால் இழந்த நரி அது வெள்ளரிக்காயை திருட போனப்ப ”கிட்டி வச்சு” வாலு வெட்டப்பட்டுடால் வால் இல்லாதது தான் சௌரியமா இருக்குன்னு இந்த நரி சொல்லிச்சாம். அந்த கதை தான் திருமாவளவன் பேசுற பேச்சு. திருமாவளவன் என்ற தீய சக்திக்கு தமிழ்நாட்டுல ஒரு தொகுதிலயாவது நிக்கணும்னு தைரியம் வருமா? ஜெயிக்க முடியுமா? அவரே பல தரம் ஒத்துக்கொண்டிருந்திருக்காரு.

என்னா அந்த கட்சி மோசமானது என்று எல்லாருக்கும் தெரியும். அதனால நான் என்ன சொல்றேன் ?  ஒரு மலைவாழ் சமுதாயத்தைச் சேர்ந்த திருமதி திரௌபதி முர்மு அவர்களே ஜனாதிபதி ஆக்கிய சமூக நீதிக்கு உறுதுணையாய் இருக்கிறவர் மோடி.  ஆனால் மதுரையில ஆலய பிரவேசத்தின் போது வைத்தியநாத ஐயர் தலைமை தாங்குறார். முத்துராமலிங்க தேவர் அவர்கள் உறுதுணையா இருக்காரு. ஆனால் பட்டியல் சமுதாய மக்கள் அந்த வார்த்தைகளை சொல்ல நான் விரும்பல, கோயிலுக்குள்ள அனுமதிக்க கூடாதுன்னு சொல்லி பேசின தலித் விரோதி ஈவேரா. என்னிடம் ஆதாரம் இருக்கு.

நீ பெரியார் மண்ணுனு வச்சு விக்கிர புத்தகங்கள் அனைத்தையும் படிச்சவன் நான். அதனால அறிவில்லாதவர்களை பேரறிஞர்னு சொல்லுவீங்க, பெண் இனத்தை பாலியல் போக பொருளாக பயன்படுத்தியவர்கள் தான் திகா, திமுகாவினர். இவர்களில் யாரும் பெண் விடுதலைக்காக போராடினவர்கள் கிடையாது. பெண்களை போக பொருளாக நடத்தியவர்கள். பகல் முழுவதும் விலை மாதர்களின்  வீடுகளில் இருந்து விட்டு, இரவிலே பொதுக் கூட்டத்திலே பேசுற கேவலமானவங்க இல்லை இந்த திக, திமுகவினர். அத்தனைக்கும் ஆதாரம் இருக்கு. எங்க ஊரு கண்ணதாசன் எழுதின வனவாசம்  புத்தகத்தை படிச்சா நமக்குத் தெரியும் என தெரிவித்தார்.

Categories

Tech |