அமெரிக்காவில் வசிக்கும் ஒரு தம்பதியினரின் வீட்டு கூரையில் 4 பாம்புகளுடன் எலிகள், தேனீக்கள் மற்றும் கரப்பான் பூச்சிகள் கூட்டத்தோடு வாழ்ந்து வந்திருக்கிறது.
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தில் இருக்கும் Lafayette என்ற இடத்தில் இருக்கும் ஒரு வீட்டிற்கு Harry Pugliese, Susan என்ற தம்பதியினர் தங்கள் மகளுடன் குடிபெயர்ந்துள்ளார்கள். அந்த வீட்டின் கூரையில் ஓட்டை இருந்துள்ளது. எனவே கடந்த பிப்ரவரி மாதத்திலிருந்து வீட்டு உரிமையாளரிடம் Harry வீட்டின் கூரை ஒழுகுவதாக கூறி வந்துள்ளார்.
எனினும் வீட்டு உரிமையாளர் அதனை சரி செய்யவில்லையாம். இந்நிலையில் திடீரென்று அந்த கூரை இடிந்து விழுந்திருக்கிறது. அதில் நான்கு பாம்புகள் இருந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கரப்பான்பூச்சிகள், தேனீக்களுடன் சேர்ந்து எலிகளும் கூட்டமாக வாழ்ந்து கொண்டிருந்ததை பார்த்த Harryயின் குடும்பத்தினர் அதிர்ச்சியில் மூழ்கி விட்டனர்.
உடனே விலங்குகள் கட்டுப்பாட்டு அமைப்பிற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டு உரிமையாளரின் அனுமதி இல்லாமல் ஒன்றும் செய்ய முடியாது என்று தெரிவித்துள்ளார்கள். ஆனால் விஷயத்தை அறிந்த பின்பும் வீட்டு உரிமையாளரான John Stafford எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
மேலும் ஒரு வாரத்தில் வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். வேறுவழியின்றி Harry குடும்பத்தினர், Susan இன் சகோதரர் வீட்டிற்கு குடிபெயர திட்டமிட்டிருக்கின்றனர்.