கோவிட் தடுப்பூசிக்காண முழு விவரத்தையும் வெளியிட வேண்டும் என்று சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.
கொரோனா என்ற கொடிய நோய் உலகம் முழுவதும் பரவி வந்தது. சில நாட்களுக்கு முன்பு அதற்கான தடுப்பு மருந்துகளையும் மருத்துவர்கள் கண்டறிந்தனர். இந்நிலையில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அவர்களின் பெயர் “கோவின்” என்ற ஆப்பிள் பதிவேற்றம் செய்யப்பட்டு அவர்கள் எந்த தேதியில் எந்த நேரத்தில் எந்த மையத்தில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்ற விவரத்தையும் எஸ்எம்எஸ் மூலமாக அனுப்பப்படுகிறது. இந்நிலையில் மருத்துவத் துறை பணியாளர்கள் சிலர் தடுப்பூசி போட்டுக் கொள்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர்.
அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் ஓல்படம் மருத்துவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் கூறியதாவது,
“கோவின்” ஆப்பிள் பதிவு செய்யப்பட்ட அனைவரும் குறிக்கப்பட்ட தேதியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். அப்படி போட்டு கொள்ளாதவர்களுக்கு தடுப்பூசியில் முன்னுரிமை அளிக்கப்படாது. மேலும் அவர்களின் பெயர்களும் பயனாளர்கள் பட்டியலில் இடம்பெறும். தடுப்பூசி போட்டுக் கொள்வதில் சுகாதார பயனாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு போட்டு முடித்தபின் முன் களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்கும். வரும் 25-ஆம் தேதி வரை முன் களப்பணியாளர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.
சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ரவீந்திரநாத் தெரிவித்ததாவது,
இந்தியாவில் பயன்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசிகள் பாதுகாப்புத் திறன் குறித்து ஆய்வுகளின் முடிவுகளை வெளிப்படையாக வெளியிட வேண்டும். அவற்றை அனைத்து நாட்டு மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிறுவனத்தின் பார்வைக்கு வைக்க வேண்டும். அதன் முழு விவரங்களை வெளியிடாததால் தான் தடுப்பூசிகளை போட்டுகொள்வதற்கு மருத்துவர்கள் தயங்குகின்றனர். ஆகையால் கரோனா தடுப்பூசிகான பாதுகாப்பு திறன் குறித்த முழுமையான விவரங்களை வெளியிட்டால் மருத்துவதுறை பணியாளர்கள் முன் வர வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.