Categories
தேசிய செய்திகள்

150 செ.மீட்டர் நீளம்… 2 கிலோ எடை… உலகிலேயே இதுதான் அதிகம்… அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்…!!

தெலுங்கானா மாநிலத்தில் 17 வயது சிறுமியின் வயிற்றில் 150 சென்டிமீட்டர் நீளமுள்ள இரண்டு கிலோ எடை உள்ள முடியை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து எடுத்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தை ஷம்ஷாபாத்தைச் சேர்ந்த சிறுமி ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் இவர் ராபன்ஸல் என்ற நோயால் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர். இது முடிகளை உன்னும் அரிய நோய். இந்த பாதிப்பு உள்ளவர்களுக்கு தங்களது தலைமுடியை அதிகளவில் சாப்பிடும் பழக்கம் இருக்கும். இந்த சிறுமி 5 மாதங்களாக இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஸ்கேன் செய்து பார்த்தபோது வயிற்றில் தலைமுடி இருந்தது தெரியவந்தது. மேலும் இந்த சிறுமிக்கு கடந்த மாதம் அறுவை சிகிச்சை செய்ய முற்பட்ட போது அவர் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டார்.

பாதிப்பில் இருந்து மீண்ட பிறகு தற்போது அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மருத்துவர்கள் இந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை செய்தனர். சுமார் 150 சென்டிமீட்டர் நீளமுள்ள இரண்டு கிலோ முடியை அவர்கள் எடுத்தனர். மேலும் 150 சென்டிமீட்டர் மூடியில் 30 சென்டிமீட்டர் வயிற்றிலும், 120 சென்டி மீட்டர் சிறு குடலிலும் இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். இதுவரை உலக அளவில் மிக நீண்ட முடி இருந்தது இந்த சிறுமிக்கு மட்டும்தான் என்று தெரிவித்துள்ளனர். இதன் காரணமாகவே இந்த சிறுமிக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |