Categories
உலக செய்திகள்

இளம்பெண்ணின் அனுமதியின்றி…. மருத்துவர் செய்த காரியம்… எழுந்துள்ள சர்ச்சை….!!!

பிரான்ஸில் ஒரு மருத்துவர் கையில் துப்பாக்கி குண்டுப்பட்ட பெண் ஒருவரின் எக்ஸ்ரேயை இணையதளத்தில் விற்பனைக்கு வைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

பொதுவாக நோயாளியின் அனுமதியின்றி அவர் தொடர்பான தகவல்களை மூன்றாம் நபருக்கு தெரியப்படுத்தக்கூடாது. இந்நிலையில் பாரீசில் இருக்கும் ஒரு பிரபல மருத்துவமனையில் Emmanuel Masmejean என்ற மூத்த எலும்பு அறுவை சிகிச்சை நிபுணர், ஒரு பெண்ணின் x-ray-வை  இணையதளத்தில் விற்பனைக்காக பதிவிட்டிருக்கிறார். இது பெரும் பிரச்சனையாக மாறியிருக்கிறது.

அதாவது கடந்த 2015-ஆம் வருடத்தில் பாரிஸில் பயங்கரவாதத் தாக்குதல் நடந்த சமயத்தில் Bataclan music hall என்ற அரங்கில் ஒரு இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது பயங்கரவாதிகளால் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பெண்ணின் X-Ray தான் அது.

இணையத்தளத்தில் மருத்துவர் வெளியிட்ட பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த மருத்துவர், அந்தப் பெண்ணின் அனுமதி இல்லாமல் அந்த படத்தை விற்பனைக்கு வைத்ததை நினைத்து வருந்துகிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் அந்த பதிவை நீக்கிவிட்டார்.

Categories

Tech |