டாக்டர் திரைப்படம் பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார் சிவகார்த்திகேயன். நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் இவர் நடிப்பில்” டாக்டர்” திரைப்படம் அக்டோபர் 9 ந் தேதி திரையரங்குகளில் வெளியானது. கதாநாயகியாக பிரியங்கா மோகனும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிகர் வினயும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் , திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த திரைப்படம் நவம்பர் 4 ஆம் தேதி தீபாவளியன்று சன் டிவியில் ஒளிபரப்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.