அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடி வரும் கர்நாடகாவை சேர்ந்த பெண் மருத்துவரை அமெரிக்க அரசு கவுரவித்துள்ளது
கொரோனாவுக்கு எதிராக நடந்துவரும் போரில் போர் வீரர்களாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், சுகாதார துறை ஊழியர்கள் களத்தில் நின்று போராடி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவில் கொரோனா நோயாளிகளை காப்பாற்ற போராடி வரும் இந்தியாவில் கர்நாடகாவை சேர்ந்த மருத்துவர் ப்ரீத்தி சுப்பிரமணியை அமெரிக்க அரசு கௌரவித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சவுத் வின்ட்சர்பகுதியிலிருக்கும் மருத்துவரின் வீட்டின் முன்பு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களின் சைரன் ஒலிக்க செய்தும் காரில் இருக்கும் ஹாரன்களை ஒழிக்க செய்தும் மருத்துவரை கௌரவித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றிலிருந்து மீண்டுவந்த மக்கள் காரில் இருந்தபடியே மருத்துவருக்கு நன்றி தெரிவித்துள்ளனர். இதனை சிறிதும் எதிர்பார்க்காத ப்ரீத்தி நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.