தம்பிக்கு குருஞ்செய்தி அனுப்பிய அண்ணன் மெரினா கடலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
சென்னை விருகம்பாக்கம் சியாமளா கார்டன் பகுதியை சேர்ந்தவர் மல்லிகார்ஜுன். போரூரில் இருக்கும் மருத்துவ கல்லூரியில் படிப்பை முடித்த இவர் பள்ளிக்கரணையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் வழக்கம்போல் நேற்று வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு தனது காரில் கிளம்பியுள்ளார்.
பின்னர் மாலை தம்பியின் தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் “எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை அம்மா அப்பாவை நன்றாக பார்த்துக்கொள் கார் லைட் ஹவுஸ் அருகே உள்ளது” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த தம்பி மெரினா கடற்கரைக்கு உடனடியாக கிளம்பி சென்றுள்ளார்.
கடலுக்கு அருகே தேடி பார்த்ததில் விவேகானந்தர் இல்லம் அருகே மல்லிகார்ஜுன் உடல் கரை ஒதுங்கி கிடந்தது. இதனை பார்த்த தம்பி காவல்துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல்துறையினர் மல்லிகார்ஜுன் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததோடு அவரது மரணம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்