தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நாக சைதன்யா. இவர் சமந்தாவின் முன்னாள் கணவர் ஆவார். அதன் பிறகு நாக சைதன்யா தற்போது என்சி 22 திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க கீர்த்தி செட்டி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகை கீர்த்தி செட்டி நடிகர் நாக சைதன்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டு இருந்தார்.
அதில் மரியாதைக்காக காரு என்ற வார்த்தையை கீர்த்தி சேர்த்திருந்தார். இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்த நாகசைதன்யா எதற்காக காரு என்ற வார்த்தையை சேர்க்கிறீர்கள். எனக்கு வயசாகிட்டின்னு நினைக்கிறீங்களா என்று பதில் அளித்துள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களை அங்கிள் என்றே அழைக்கலாம் என இணையத்தில் பல்வேறு விதமாக நாக சைதன்யாவை ட்ரோல் செய்து வருகிறார்கள். மேலும் நடிகை கீர்த்தி செட்டி மற்றும் நாக சைதன்யாவின் பதிவுகள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
Thank you so much krithi !! Why you adding the garu ?? Because I’m growing older ??
— chaitanya akkineni (@chay_akkineni) November 24, 2022