சன் ஸ்கிரீன் டேனிங், சரும சேதத்தை தடுப்பது மட்டுமல்லாமல் தோல் புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கிறது.
நீங்கள் எந்த மாதிரியான அழகு பராமரிப்பு முறையை பயன்படுத்தினாலும், சரும பராமரிப்பில் சன் ஸ்கிரீனுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். டேனிங், சரும சேதத்தை தடுப்பது மட்டுமல்லாமல், இது தோல் புற்றுநோய் ஆபத்தையும் குறைக்கிறது. உலகம் முழுவதும் உள்ள அழகியல் நிபுணர்கள், இதன் சிறப்பு கருதியே பரிந்துரைக்கிறார்கள்.
ஆனால் இது மழைக்காலத்திற்கும் ஒத்துப்போகுமா? மழைகாலத்தில், இருண்ட மேகங்களின் காலம் என்பதால் வெயில் காலத்தை விட இந்த காலம் சரும பாதிப்பை ஏற்படுத்தாது என்று பலரும் நினைக்கின்றனர். இது உண்மை தானா என்பதை அறிய தோல் சிகிச்சை நிபுணரிடம் கேட்டோம்.
“மழைக்காலத்தில், அதிகமான மேகங்கள் சூழ்ந்திருப்பதாலும் சூரியன் தெரியாமல் இருப்பதாலும் சன்ஸ்கீரின் தேவையில்லை என்று மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இது உண்மை இல்லை. சூரிய ஒளியை பார்க்காவிட்டாலும் சூரியக் கதிர்கள் இருந்து கொண்டே தான் இருக்கும். வெய்யில் இருக்கிறதோ இல்லையோ, பகல் என்றாலே சன்ஸ்கிரீன் உபயோகிப்பது அவசியம்” என்கிறார்
“சூரிய ஒளியில், யு.வி கதிர்கள் மற்றும் அகச்சிவப்பு கதிர்கள் இருக்கின்றன. இவை பல சரும பிரச்சனைகளை தரும். சருமத்துக்கு வயதான தோற்றத்தை ஏற்படுத்தும், சரும டேமேஜை உண்டாக்கும் இன்னும் பல பிரச்சனைகளுக்கு கரணமாக சூரியக் கதிர்கள் இருக்கின்றன. சூரிய கதிர்களை நீங்கள் மழைக்காலத்தில் பார்க்கவில்லையென்றாலும், அது உங்கள் சருமத்தின் மீது விழுந்து கொண்டு தான் இருக்கும். இதனால், மழைக்காலத்திலும் சன்ஸ்கீரின் தடவுவது அவசியம்” என்று நிபுணர் கூறுகிறார்.
மேலும் மழைக்காலத்தில் சன்ஸ்கிரீன் பயன்படுத்துவதற்கு ஏதேனும் முன்னெச்சரிக்கை தேவையா என்று கேட்டோம். “உங்கள் உடலின் அனைத்து வெளிப்புறப் பகுதிகளில் சன்ஸ்கிரீன் லோஷன் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவது, மிக முக்கியமானது. ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் சன்ஸ்கீரின் லோஷனை மீண்டும் பயன்படுத்துங்கள். ஏனெனில் மழையில் கலைய வாய்ப்பிருக்கிறது” என்றார்.
மழைக்காலத்திலும் இந்த சன்ஸ்கிரீனை பயன்படுத்தி சரும பராமரிப்பில் கவனம் செலுத்துங்கள்.