Categories
சினிமா தமிழ் சினிமா

“லண்டனில் பிரதீப் ரங்கநாதன்”… யாருக்கு கதை சொல்ல போயிருக்கார் தெரியுமா…? கேட்டா அசந்து போயிடுவீங்க….!!!!

தமிழ் சினிமாவில் ஜெயம் ரவி நடித்த கோமாளி என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்த படத்திற்கு பிறகு பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் தயாரிப்பாளருக்கு பல மடங்கு லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது. லவ் டுடே படத்தை பார்த்த ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலரும் பிரதீப் ரங்கநாதனை புகழ்ந்து தள்ளினர். அதோடு நடிகர் ரஜினியும் பிரதீப் ரங்கநாதனை வீட்டிற்கு அழைத்து நேரில் வாழ்த்தினார். இந்நிலையில் தலைவர் 171-வது படத்தை லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சிபிச் சக்கரவர்த்தி இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், சிபிச் சக்கரவர்த்தி சொன்ன கதை ரஜினிக்கு திருப்தி அளிக்கவில்லையாம்.

இதன் காரணமாக தலைவர் 171-வது படத்தை பிரதீப் ரங்கநாதன் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் லைகா நிறுவனத்தின் உரிமையாளர் சுபாஷ் சரணுக்கு கதை சொல்வதற்காக பிரதீப் ரங்கநாதன் லண்டன் சென்று இருப்பதாக கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பிரதீப் ரங்கநாதன் லண்டனில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் ரஜினி மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தலைவர் 171-வது படம் உருவாகப் போவதாக வெளியான தகவல் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |