Categories
சினிமா தமிழ் சினிமா

“நடிகர் பார்த்திபனை விவாகரத்து செய்த சீதாவின் 2-வது கணவர் யார் தெரியுமா”?…. வைரல் புகைப்படம்…!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் சீதா. இவர் நடிகர் பார்த்திபனை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், 2 பெண் குழந்தைகளுக்கு தாயானார். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பார்த்திபனை பிரிந்ததால், 10 வருடங்களாக சினிமாவில் தலை காட்டாமல் இருந்தார். அதன் பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க வந்த சீதாவுக்கு போதிய அளவு வாய்ப்புகள் கிடைக்காததால் சீரியல் பக்கம் ஒதுங்கினார்.

அப்போது சீரியல் நடிகர் சதீஷ் உடன் காதல் ஏற்பட்டு தன்னுடைய 43-வது வயதில் அவரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் 2-வது திருமணமும் சீதாவுக்கு கைகூடவில்லை. திருமணம் ஆன 6 வருடத்தில் சீதா மற்றும் சதீஷ் விவாகரத்து பெற்று  பிரிந்து விட்டனர். தற்போது சீதா அவருடைய தாயாருடன் தனியாக வசித்து வருகிறார். மேலும் நடிகர் பார்த்திபனை எதற்காக விவாகரத்து செய்தேன் என்ற காரணத்தை சீதா அண்மையில் தெரிவித்த நிலையில், தற்போது அவருடைய இரண்டாவது கணவர் யார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் தீயாக பரவி வருகிறது.

 

Categories

Tech |