Categories
சினிமா தமிழ் சினிமா

“முதல்ல வாரிசா, இல்லனா துணிவா”… வைகைப்புயல் வடிவேலு என்ன சொன்னாரு தெரியுமா….? நீங்களே பாருங்க….!!!!

தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக வலம் வருபவர் வைகைப்புயல் வலம் வருபவர் வைகைப்புயல் வடிவேலு. இவர் நடிப்பில் அண்மையில் நாய் சேகர் திரைப்படம் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் நடிகர் வடிவேலு பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். வடிவேலு சாமி தரிசனம் செய்த பிறகு அங்கிருந்த பக்தர்கள் வடிவேலுவுடன் சேர்ந்து செல்பி எடுத்த மகிழ்ந்தனர். அதன் பிறகு நடிகர் வடிவேலு செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, எந்த குறையாக இருந்தாலும் திருச்செந்தூர் முருகனை தரிசித்தால் அவை நீங்கிவிடும். நான் எந்த ஒரு கட்சியிலும் கூட்டணியிலும் இல்லை.

என் கூட்டணி காமெடி நடிகர்கள் வந்தால் இணைந்து நடிக்க வேண்டியது மட்டும் தான். நான் தற்போது மாமன்னன், சந்திரமுகி 2 மற்றும் விஜய் சேதுபதியுடன் ஒரு படம் என நிறைய படங்களை கைவசம் வைத்துள்ளேன். நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் குடும்பத்தோடு சேர்ந்து பார்க்க வேண்டிய படம். இந்த படம் நன்றாக இருப்பதாக பலரும் கூறுகிறார்கள். நான் மீண்டும் சினிமாவுக்கு நடிக்க வந்தது மக்களுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. துணிவு மற்றும் வாரிசு என 2 படங்களும் வெற்றி பெற வேண்டும். அதேபோல் எல்லா படங்களும் வெற்றி பெற வேண்டும். சினிமா நன்றாக இருந்தால்தான் அனைவரும் நன்றாக இருக்க முடியும். மேலும் அனைத்தும் கடவுளின் ஆசிர்வாதம் என்று கூறினார்.

Categories

Tech |