மாதவனின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மாதவன் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இதனையடுத்து, மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டாள், ரன், அன்பே சிவம் போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார். இவர் தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, கன்னடம், மலையாளம் போன்ற பல மொழிகளிலும் நடித்துள்ளார்.
சமீபத்தில், திரையுலக பிரபலங்களின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியான வண்ணம் உள்ளன. இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இவருடைய முழு சொத்து மதிப்பு 90 கோடிக்கு மேல் இருக்கும் என கூறப்படுகிறது.