Categories
சினிமா தமிழ் சினிமா

”16 வயதினிலே” படத்திற்கு நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…..? பட்டியல் இதோ….!!!

”16 வயதினிலே’ படத்தில் நடிப்பதற்காக நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான திரைப்படம் ”16 வயதினிலே”. இந்த படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி ஆகியோர் நடித்திருந்தனர். இவர்களின் கதாபாத்திரங்கள் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படத்தில் நடிப்பதற்காக நடிகர் மற்றும் நடிகைகள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,

ரஜினிகாந்த்: இந்த படத்தில் வில்லன் தோற்றத்தில் பரட்டை கதாபாத்திரமாக இவர் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்கு இவருக்கு வழங்கப்பட்ட சம்பளம் 3 ஆயிரம் என கூறப்படுகிறது.

கமல்ஹாசன்: இந்தப்படத்தில் சப்பானி என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். இந்த படத்திற்காக இவர் சம்பளமாக 27000 ரூபாய் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

ஸ்ரீதேவி: மயில் என்ற கதாபாத்திரத்தின் மூலம் இந்த படத்தில் நடித்தவர் ஸ்ரீதேவி. இளைஞர்கள் மத்தியில் இவருக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த படத்திற்காக இவர் வாங்கிய சம்பளம் 9000 ரூபாய் என கூறப்படுகிறது.

காந்திமதி: இந்த படத்தில் இவர் ஸ்ரீதேவிக்கு அம்மா கதாபாத்திரமாக நடித்திருப்பார். இந்த படத்தில் இவர்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இந்த படத்திற்காக இவர் 1000 ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார்.

கவுண்டமணி: இந்த படத்தில் ரஜினிகாந்துக்கு வலது கையாக இந்த படத்தில் இவர் நடித்திருப்பார். கவுண்டமணி இந்த படத்திற்காக 1000 ரூபாய் சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Categories

Tech |