Categories
மாநில செய்திகள்

தமிழக விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரம்…. எவ்வளவு மானியம் வழங்கப்படும் தெரியுமா….? இதோ முழு விபரம்…..!!!!!

தமிழக அரசு விவசாயிகள் மத்தியில் வேளாண் இயந்திரமாக்குதல் திட்டத்தை பிரபலப்படுத்து வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தனிப்பட்ட விவசாயிகள் இயந்திரம் வாங்குதல், இளைஞர்களை விவசாயத்தில் ஈடுபட வைக்க, பதிவு செய்த விவசாய‌ சங்கங்கள், தொழில் முனைவோர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் போன்றவற்றின் மூலம் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வேளாண் இயந்திர மையம் நிறுவுதல் போன்றவற்றிற்கு நடப்பு நிதியாண்டில் மத்திய மற்றும் மாநில அரசுகளால் நிதி ஒதுக்கப்படும் என்று அறிவிப்பு வெளியானது. அதன்படி 150 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், முதற்கட்டமாக 41.67 கோடி ரூபாய் நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தனிப்பட்ட விவசாயிகளுக்கு இயந்திரம் வாங்குவதற்கு 40 சதவீதம் மானியமும், ஆதி திராவிட, சிறு, குறு மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும் வழங்கப்படும்.

இவர்களுக்கு மட்டும் கூடுதலாக 20 சதவீதம் மானியமும் சேர்த்து வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நெல் அறுவடை இயந்திரத்திற்கு ரூ.‌ 11 லட்சமும், கொத்து கலப்பைக்கு ரூபாய் 50,000, நிலக்கடலை அறுவடை இயந்திரத்திற்கு ரூபாய் 70 ஆயிரமும், விதைப்பை கருவிக்கு 24,100 ரூபாயும், சுழல் கலப்பைக்கு 44,800 ரூபாயும், களை எடுக்கும் இயந்திரத்திற்கு 60 ஆயிரம் ரூபாயும், நெல் நடவு இயந்திரத்திற்கு ரூபாய் 5 லட்சமும், பவர் டில்லருக்கு ரூபாய் 85 ஆயிரமும், மினி டிராக்டருக்கு ரூபாய் 2.25 லட்சமும், டிராக்டருக்கு ரூபாய் 5 லட்சமும் அதிகபட்சமாக மானியமாக வழங்கப்படும்.

அதன் பிறகு வட்டார அளவில் வேளாண் இயந்திர வாடகை மையத்தை ரூபாய் 25 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு 40 சதவிகித மானியத்தில் ரூபாய் 10 லட்சம் வழங்கப்படும். இதேபோன்று கிராம அளவில் வேளாண் இயந்திர வாடகை மையத்தை ரூபாய் 10 லட்சம் மதிப்பீட்டில் அமைப்பதற்கு 80 சதவீத மானியத்தில் 8 லட்ச ரூபாய் வழங்கப்படும். இதனையடுத்து கரும்பு சாகுபடிக்கான இயந்திர வாடகை மையத்தை ரூபாய் 150 கோடி மதிப்பீட்டில் அமைப்பதற்கு 40 சதவிகித மானியத்தில் ரூபாய் 60 லட்சம் வழங்கப்படும்.

இந்த திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் உழவன் செயலி அல்லது https;//aed.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இது தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு அருகிலுள்ள வேளாண்மை பொறியியல் துறை அலுவலகத்தை அணுகலாம். மேலும் திட்டத்தில் இணைந்து பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஆதார் அட்டை நகல், சொந்த நிலத்திற்கான சிட்டா மற்றும் அடங்கல், புகைப்படம், பழங்குடியின மற்றும் ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த விவசாயிகளாக இருந்தால் அதற்குரிய சாதி சான்றிதழ், சிறு, குறு விவசாயிகளுக்கான சான்றிதழ் போன்றவைகள் வைத்திருக்க வேண்டும். இந்த தகவலை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ளார்.

Categories

Tech |