Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

உங்கள் தலையில் பேன் தொல்லையா? இதோ சில எளிய தீர்வுகள்

பேன் மனிதர்கள் மூலம் பரவ கூடிய ஒரு சிறிய வகை ஒட்டுண்ணி ஆகும். பேன் இருக்கும் நபர் பயன்படுத்தும் சீப்பு, டவல் மூலமாகவும் அவர் அருகில்  தூங்குவதாலும்  எளிதில் பரவக்கூடியது.

இது இரத்தத்தை உறிஞ்சுவதோடு   மட்டுமின்றி அரிப்பை ஏற்படுத்தி தலையை சொரிந்து தலை முடி வேர்களை புண்ணாக்கி சேதமடைய செய்யும். இதனால் தலைமுடி உதிர்வு கூட ஏற்படும். அதிக அளவு உற்பத்தி ஆகும் தன்மை கொண்டதால் இதனை எளிய இயற்கை முறையில் அகற்றுவது தான் சிறந்தது.

அந்த வகையில் பேன் தொல்லையில் இருந்து விடுபட சில வீட்டுக் குறிப்புகள்: 

  1. துளசி மற்றும் வேப்பிலையை நன்றாக அரைத்து அதை வேர்களில் படும்படி தேய்த்து காய்ந்ததும் தலைக்கு குளித்து விடுங்கள். இப்படி வாரம் 2 முறை செய்தால் பேன் தொல்லை இருக்காது.
  2. கற்பூரத்தை தூளாக்கி தேங்காய் எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து இரவு தூங்கிவிட்டு மறுநாள் காலை குளித்தால் பேன் முற்றிலும் ஒழிந்துவிடும்.
  3. உப்பு மற்றும் வினிகரை சம அளவில் தேவைக்கு ஏற்ப கலந்து அதை சிறிய பாட்டிலில் நிரப்பி வேர்களில் படும்படி spray செய்யுங்கள் இரண்டு மணி நேரம் கழித்து தலைக்கு குளித்தால் பேன் தொல்லை இருக்காது.
  4. பூண்டு நன்கு அரைத்து அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு கலந்து தலையில் சீராக அப்ளை செய்து 30 நிமிடங்கள் கழித்து குளிக்க வேண்டும்.  இவ்வாறு பெண்கள்  வாரம் ஒரு முறை செய்யலாம்.
  5. வாஸ்லின் வேர்களில் படும்படி தேய்த்து மறுநாள் காலை தேங்காய் எண்ணெய் தடவிக் கொண்டு சீப்பால் தலை வாரினால் அனைத்து பெண்களும் வந்துவிடும் பின் தலைக்கு குளித்து விடுங்கள்.

Categories

Tech |