நாட்டுக் கோழி வறுவல்
தேவையான பொருட்கள் :
நாட்டுக்கோழிக் கறி – 1 கிலோ
வெங்காயம் – 4
தக்காளி – 2
இஞ்சி-பூண்டு விழுது – 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் – 2
மஞ்சள்தூள் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
அரைக்க:
தேங்காய்த்துருவல் – 7 டேபிள்ஸ்பூன்
மிளகு – காரத்திற்கேற்ப
செய்முறை:
முதலில் கோழிக்கறியுடன் மஞ்சள்தூள் , உப்பு, சிறிது இஞ்சி-பூண்டு விழுது மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் 3 விசில் விட்டு வேக விடவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், கறிவேப்பிலை ,இஞ்சி-பூண்டு விழுது , நறுக்கிய தக்காளி, பச்சைமிளகாய், மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்து எண்ணெய் பிரியும் வரை நன்கு வதக்க வேண்டும். இதனுடன் வெந்த கோழிக் கறியையும் , அரைத்த தேங்காய், மிளகு விழுதையும் சேர்த்து நன்கு வதங்கி வரும் வரை வறுத்து எடுத்தால் சூப்பரான நாட்டுக் கோழி வறுவல் தயார் !!!