உடல் சூட்டை தணிக்கும் வழி முறைகள் :
தினமும் இருவேளை குளிக்க வேண்டும் .குளிர்ந்த பொருட்கள் சாப்பிடவோ , குடிக்கவோ கூடாது .
காரமான உணவுகள் வேண்டாம் .பதப்படுத்தப் பட்ட பொருட்கள் சாப்பிட கூடாது .மாமிச உணவுகளை சாப்பிட கூடாது .
எண்ணெய் பலகாரங்கள் கூடாது .மாதுளை ,முள்ளங்கி ,வெள்ளை பூசணி , தர்பூசணி , வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிடலாம் .
நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும் .இளநீர் , எலுமிச்சை சாறு அடிக்கடி குடித்து வரலாம் .காலையில் எழுந்தவுடன் வெந்தய தண்ணீர் அல்லது சீரக தண்ணீர் அருந்தலாம் .
விளக்கெண்ணெய் அல்லது நல்லெண்ணெய் விரல் நகங்களில் தேய்த்து வரலாம் .கசகசாவை ஊறவிட்டு அந்த தண்ணீரை வாரத்திற்கு 2 முறை குடித்து வர சூடு தணியும் .
நல்லெண்ணெய் தேய்த்து குளித்து வரலாம் .கற்றாழை சாறுடன் மோர் , பெருங்காயத்தூள் சேர்த்து வாரத்திற்கு ஒரு முறை குடித்து வந்தால் உடனடியாக சூடு தணிந்து விடும் .