தலைமைச் செயலக அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று சென்னை முதன்மை செயலர் தெரிவித்துள்ளார்.
சென்னை முதன்மை செயலர், தலைமைச் செயலக வளாகத்திற்குள் முகக் கவசம் அணிவது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மத்திய அரசின் மக்கள் நல்வாழ்வு துறை கோரானா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி தலைமைச் செயலக வளாகத்திற்குள் நுழையும் ஊழியர்கள், பார்வையாளர்கள் என அனைவரும் முகக்கவசம் கட்டாயமாக அறிந்திருக்க வேண்டும். தற்போது தலைமைச் செயல வளாகத்தில் சில ஊழியர்களும், பார்வையாளர்களும் முகக்கவசம் அழியாமல் இருக்கின்றன. பணியிடத்தில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேல் முகக் கவசம் அணியாமல் வருபவர்களுக்கு தலைமைச் செயலக வளாகத்திற்குள் அனுமதி இல்லை. மேலும் முகம் கவசம் அணியாத ஊழியர்கள் மீது துறை ரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.