இந்த உலகில் மிகவும் தைரியமான விலங்கு எது என்று கேட்டால் நமக்கு நினைவுக்கு வருவது சிங்கம், புலி, கரடி, சிறுத்தை, ஓநாய், யானை என பல உயிரினங்களை கூறுவோம். இந்த விலங்குகள் அனைத்தும் தங்களின் அடுத்த வேளை உணவுக்காக இன்னொரு விலங்கை வேட்டையாடும். ஒரு விலங்கு மற்றொரு விலங்கிடம் இருந்து தங்களது உயிரை காப்பாற்றிக் கொள்வதற்கும் ஓடும். அப்படி எதையும் பார்த்து பயப்படாமல் இருக்கும் ஒரு உயிரினம் இருக்கின்றது. இதுவரை இந்த உயிரினத்தை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா என்பது தெரியவில்லை. அவ்வளவாக தன்னுடைய அறையைவிட்டு வெளியில் வராத உயிரினம். வெளி உலகுக்கு அவ்வளவாக தெரியாத உயிரினம். சுருக்கமாக கூற வேண்டுமென்றால் ஜோம்பி உயிரினம்.
அதன் பெயர்தான் தேன் வளைக்கரடி. இதனை ஆங்கிலத்தில் Honey Badger என்று அழைப்பார்கள். யாரையும் கண்டு பயப்படாத, தனது உயிரைப் பற்றி கவலைப்படாத ஒரே விலங்கு, எதிரில் இருப்பது சிங்கமாக இருந்தாலும் சரி, புலியாக இருந்தாலும் எதிர்த்து நிற்கும். பாம்பைப் பார்த்தால் படையே நடுங்கும் என்று கூறுவார்கள். ஆனால் இந்த விலங்கு பாம்பை ஒரே கடியில் கடித்து கொன்று தின்றுவிடும். இந்த விலங்கு மற்றொரு விலங்குடன் சண்டை போட்டால் ஒன்று எதிர்த்து நிற்கும் விலங்கு சாக வேண்டும், இல்லையெனில் இது சாகும். அந்த அளவுக்கு விடாமுயற்சியுடன் இந்த தேன் வளைக்கரடி சண்டை போடும். மற்ற விலங்கு போல் சண்டையிலிருந்து பாதியில் ஓடாதாம். இதனுடைய தைரியத்திற்கு ஆகவே இந்த விலங்கு புக் ஆஃ வேர்ல்டு காட்டில் இடம்பெற்றுள்ளது.