Categories
Uncategorized தேசிய செய்திகள்

நாளை மருத்துவமனை, தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம் – மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தல்!

நாளை இரவு 9 மணிக்கு வீட்டில் உள்ள மின் விளக்குகளை மட்டும் அணைக்க வேண்டும் என மத்திய மின் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மருத்துவமனை, வீட்டு உபயோக பொருட்களுக்காக ஸ்விட்சை அணைக்க வேண்டாம். குளிர்சாதன பெட்டி, மின்விசிறி, டிவி போன்ற சாதனங்களை அணைக்க தேவையில்லை.

தெரு விளக்குகளை அணைக்க வேண்டாம், ஒவ்வொரு தெருவிலும் விளக்கு எரிவதை உள்ளாட்சி அமைப்புகள் உறுதி செய்ய வேண்டும் என மத்திய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. ஒரே நேரத்தில் மின் விளக்குகளை அணைத்து எரிய விடுவதால் பாதிப்பு ஏற்படாது மின்னழுத்தம் ஏற்படும் என கூறப்படும் செய்தியில் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் டிவிட்டர் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றியுள்ளார். அதில் கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் மஹா சக்தியை உருவாக்க வேண்டும் என்று கூறிய அவர், வரும் நாளை (ஏப்.5ம் தேதி) இரவு 9 மணிக்கு வீட்டு மின்மிளக்குகளை 9 நிமிடங்கள் அணைக்க வேண்டும்.

வீட்டின் நான்கு மூலைகளிலும் ஒளியை பரப்பும் வகையில் டார்ச் அல்லது செல்போன், அகல் விளக்கு, மெழுகுவர்த்தியை ஏற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் நாளை இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள், மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. அனைத்து மின்சாதனங்களையும் அணைத்து விட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்தால் மின்சார பிரச்னை ஏற்படும் என்றும் கூறியிருந்தது. இதையடுத்து மத்திய மின் அமைச்சகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |