யார் பேச்சையும் கேட்டு அரசியலுக்கு வந்தால் என் முடிவு தான் என்று சிரஞ்சீவி ரஜினிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பல வருடங்களாக தான் அரசியலுக்கு இதோ வருகிறேன், இதோ வருகிறேன் என்று பூச்சாண்டி காட்டி வந்தார். இதையடுத்து தற்போது ஜனவரியில் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார். எனவே அவருடைய ரசிகர்கள் படு சந்தோஷத்தில் இருந்தனர். இந்நிலையில் ரத்த அழுத்தம் காரணமாக ரஜினி ஹைதராபாத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதயடுத்து ரஜினி தான் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று அறிவித்தார். எனவே ரஜினியின் இந்த அறிவிப்பு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் ரஜினியின் இந்த அறிவிப்புக்கு அரசியல் கட்சியினர் மற்றும் நடிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது என்னையும் கட்சி ஆரம்பிக்கக்க சொன்னார்கள். அவர்கள் பேச்சை கேட்டு கட்சி ஆரம்பித்ததால் நிறைய பாதிப்புகளை நான் சந்தித்தேன். யோசித்து முடிவெடுங்கள் என்று எச்சரித்துள்ளார். இதுவும் ரஜினி கட்சி ஆரம்பிக்காததற்கு காரணமாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கபடுகிறது