Categories
உலக செய்திகள்

இறந்த பறவையை பார்த்தா தொடாதீங்க… தொற்று பரவும் அபாயம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!

சுவிட்சர்லாந்தில் பொதுமக்கள் இறந்த பறவைகளை பார்த்தால் அதனை தொட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளிநாடுகளில் இருந்து வந்த காட்டுப் பறவைகள் இறந்து கிடந்துள்ளது. அதனை ஆய்வு செய்ததில் பறவைக்கு வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. ஆனால் இந்தப் பறவை காய்ச்சல் வைரஸ் மனிதர்களுக்கு தொற்று ஏற்படுத்தாது என்று கூறப்படுகிறது. இருப்பினும் உள் நாடுகளில் வளர்க்கப்படும் பறவைகளுக்கு இந்த தொற்று பரவ வாய்ப்புள்ளது.

இதனை கட்டுப்படுத்த துர்காவ் மண்டல நிர்வாகம் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இரண்டாவது பறவையின் வைரஸை கண்டுபிடித்த பின் பறவைக்காய்ச்சல் மீதான நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்படும் என்று பெடரல் அரசும் மண்டல நிர்வாகிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் பொதுமக்கள் யாராவது இறந்த பறவைகளை கண்டால் அதை அப்புறப்படுத்தவோ, தொடவோ கூடாது. நிர்வாகிகளுக்கு உடனடியாக தகவல் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். கோழி இறைச்சிகள், முட்டைகள் போன்ற உணவுப் பொருட்களை பாதுகாப்பாக உண்ணுங்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |