Categories
மாநில செய்திகள்

“மக்களுக்கு இடையூறு செய்யும் பேனர்கள் வைக்க கூடாது”…. அதிமுக தலைமை வேண்டுகோள்..!!

கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைக்க கூடாது  என்று தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.  

சென்னை பள்ளிக்கரணை வழியாக சாலையில் தனது பைக்கில் சுபஸ்ரீ (23) சென்று கொண்டிருந்த  போது சாலையின் நடுவில் திருமணத்திற்காக வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களில் ஒன்று சுபஸ்ரீ மீது விழுந்துள்ளது. இதனை எதிர்பார்க்காத  சுபஸ்ரீ சாலையில் தூக்கி வீசப்பட்டார். அந்த நேரத்தில் பின்னால் வந்த தண்ணீர் லாரி ஒன்று அவர் மீது ஏறியதில் பரிதாபமாக பலியானார்.

இதையடுத்து முக ஸ்டாலின்  நிகழ்ச்சியோ,  கூட்டமா எதுவாக இருந்தாலும் கட் அவுட், பேனர் வைக்க கூடாது. அப்படி மீறி பேனர் வைத்தால் நிகழ்ச்சிக்கு வர மாட்டேன் என்று கட்சி நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Image result for eps ops

இந்நிலையில் தமிழக முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர் செல்வம் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளனர். அதில்  கட்சி நிகழ்ச்சிகள், இல்ல நிகழ்ச்சிகளில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பேனர்கள் வைப்பதை நிறுத்த வேண்டும் என்று கழக உறுப்பினரகள் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

Image

மக்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் எந்த ஒரு செயலிலும் கழகத்தினர் ஈடுபடவே கூடாது. ஒருசிலர் ஆர்வமிகுதியால் விளைவுகளை அறியாமலும் நடைமுறையிலுள்ள கட்டுப்பாடுகளை அறியாமலும் செய்கின்ற சில செயல்களால் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்ற செய்தி வரும்போது நாங்கள் மிகுந்த மனவேதனை அடைகிறோம் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Image

Categories

Tech |