Categories
மாநில செய்திகள்

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக செல்ல வேண்டாம் – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்!

வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு நடை பயணமாக செல்ல வேண்டாம் என முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களுக்கு பணிகளுக்காக சென்ற தொழிலாளர்கள் ஊர் திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். சில நடைப்பயணமாகவே சொந்த ஊருக்கு திரும்பும் அவலனியையையும் காண முடிகிறது. இந்த நிலையில் வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட மாநில அனுமதியுடன் அந்தந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்க ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். வெளிமாநில தொழிலாளர்கள் தன்னிச்சையாகவோ, நடைபயணமாகவோ, பிற வாகனங்கள் மூலமாகவோ செல்ல வேண்டாம் என அவர் கூறியுள்ளார். மே 5ம் தேதி முதல் 15ம் தேதி வரை வெளிமாநில தொழிலாளர்கள் சம்பந்தப்பட்ட மாநிலங்களின் ஒப்புதலுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

43 ரயில்களில் பீகார், ஒடிஷா, ஜார்கண்ட், ஆந்திரா, மேற்கு வங்கம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். தினமும் சுமார் 10,000 வெளி மாநில தொழிலாளர்கள் சம்மந்தப்பட்ட மாநிலங்களில் ஒப்புதலுடன் அனுப்பி வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ரயில்வே கட்டணம் உள்பட அனைத்து பயணச் செலவுகளை அரசே ஏற்றுக் கொள்கிறது என கூறிய முதல்வர் பழனிசாமி, சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் வரை வெளிமாநில தொழிலாளர்கள் தற்போது தங்கியுள்ள முகாம்களில் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |