அரசு மருத்துவர்களுக்கு மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடஒதுக்கீடு வழங்க கூடாது என மத்திய அரசு வாதிட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு முக்கியமான நடைமுறை என்பது கடந்த 1996ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு மருத்துவமனைகளில் எம்பிபிஎஸ் படிக்க கூடிய அரசு மருத்துவர்கள் மேற்கொண்டு மருத்துவ மேற்படிப்பு படிக்க விரும்பினால், அதாவது அரசு செலவிலேயே படிக்க விரும்பினால் அவர்கள் இரண்டு ஆண்டுகள் கிராமப்புறங்களில் அல்லது மலைப் பகுதிகளில், மக்கள் அதிகமாக செல்ல முடியாத கடுமையான பகுதிகளில் பணியாற்றினால் அவர்களுக்கு மருத்துவ மேற்படிப்பு முன்னுரிமை என்பது வழங்கப்படும். அவர்களை அரசே தனது செலவில் படிக்க வைக்கும்.
இரண்டு ஆண்டு அவர்கள் செய்யக்கூடிய சேவைக்கு கைமாறாக அவர்களை மருத்துவ மேற்படிப்பில் படிக்க வைக்கும் இந்த நடைமுறையானது இருந்து வந்தது. ஆனால் நீட் தேர்வுக்கு பிறகு கடுமையான குழப்பங்கள் ஏற்பட்டதையடுத்து இந்த நடைமுறையில் பல்வேறு சிக்கல்கள் எழ தொடங்கியது. குறிப்பாக தனியார் மருத்துவ மருத்துவ மாணவர்கள் நீட் தேர்வு தகுதியின் அடிப்படையில் தான் மாணவர் சேர்க்கை என்பது இருக்க வேண்டும். அதை தவிர்த்து இந்த மாதிரியான பணி செய்ததற்காக, அவர்கள் சேவை செய்ததற்காக அவர்களுக்கு அங்கீகாரம் ஏதும் வழங்கக்கூடாது என்ற ஒரு நோக்கில் மனு தாக்கல் செய்திருந்தார்கள்.
ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் தமிழக அரசின் இந்த 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கக் கூடிய நடைமுறைக்கு அனுமதி வழங்கி இருந்தார்கள். இந்த சூழலில் இந்த நடைமுறை சரியாகப் பின்பற்றப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் சில அரசு மருத்துவர்கள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீது பதிலளித்த தமிழக அரசு…. இந்த ஆண்டு என்னென்ன மாதிரியான நடை முறைகள் பின்பற்றப்படுகிறது ? 50 சதவீத இட ஒதுக்கீடு சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்பு உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்பில் கட்டாயம் பின்பற்றப்படும் என்ற ஒரு அரசாணையில் அவர்கள் தாக்கல் செய்திருந்தார்கள்.
இந்த அரசாணைக்கு எதிராக மீண்டும் தனியார் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார்கள். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வில் மிக முக்கியமான ஒரு உத்தரவை வழங்கி இருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் மத்திய அரசு 50 சதவீத இட ஒதுக்கீடு முறைய, அரசு மருத்துவர்களுக்கு முன்னுரிமை வழங்கக் கூடிய இந்த விஷயத்தை செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து இருந்தார்கள். இதில் நிறைய குளறுபடிகள் இருக்கின்றது உள்ளிட்ட காரணங்களை சொல்லப்பட்டு இருந்தது.
இந்நிலையில் மத்திய அரசின் வாதங்களை ஏற்றுக் கொண்டு தற்போது உச்சநீதிமன்றம் இந்த ஆண்டு மருத்துவ மேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என உத்தரவு பிறப்பித்திருக்கிறார். இது ஒரு இடைக்கால உத்தரவு தான். மேற்கொண்டு இந்த வழக்கில் இந்த முறையை தொடர்ச்சியாக பின்பற்றலாமா ? வேண்டாமா என்பது சம்பந்தமான விஷயங்கள் தொடர்பாக வரும் ஜனவரி மாதத்திற்கு பிறகு மீண்டும் விசாரிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். மொத்தத்தில் இன்றைய விசாரணையின் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீடு கிடையாது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.