Categories
உணவு வகைகள் லைப் ஸ்டைல்

“மறந்து கூட இத சாப்பிடாதீங்க”… கோமாவுக்கு கூட சென்றுவிடுவோமாம் ஆபத்து அதிகம்..!!

ஆப்பிளில் சத்துக்கள் நிறைந்து காணப்பட்டாலும், அதன் விதைகளில் விஷத்தன்மை வாய்ந்த ஒரு சயனைடு உள்ளது.

ஒரு கிராம் ஆப்பிள் விதையில் 0.06-0.024 கிராம் அளவிற்கு சயனைடு எனும் நச்சுக்கள் உள்ளது. அத்தகைய ஆப்பிள் பழத்தின் விதைகளையும் நாம் சேர்த்து சாப்பிட்டால் பலவிதமான பக்கவிளைவுகள் ஏற்படுத்தும்.

ஆப்பிள் விதையை சாப்பிட்டால் ஏற்படும் ஆபத்துக்கள்

ஆப்பிள் விதைகளில் இருக்கும் அமைக்கடலின் என்ற சயனைடு மிகவும் நச்சுத்தன்மை கொண்டது. அத்தகைய ஆப்பிள் விதைகளை நாம் உண்ணும் போது அவை முதலில் செரிமான மண்டலத்தை சென்றடைந்து அந்த சயனைடு நச்சாக மாறி, உடலின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

ஆப்பிள் விதைகளை நாம் சாப்பிடும் போது அவை முதலில் நம் உடலில் உள்ள சுவாச உறுப்புகளுக்கு செல்லும் ஆக்சிஜனை தடுத்து, இதயம், மூளை மற்றும் ரத்த அழுத்தத்தை அதிகரித்து, உயிருக்கு ஆபத்தை விளைவிக்க கூடியதாக அமைகிறது. தெரியாமல் ஆப்பிள் விதைகளை உண்டால் அவை அவர்களின் நோய் எதிர்ப்பு திறனை பொறுத்தே பாதிப்பை ஏற்படுத்தும்.

இதனால் அவர்களுக்கு சில நேரங்களில் வாந்தி, மயக்கம், தலைசுத்தல், வயிற்றில் வலி போன்றவை ஏற்படும். ஆப்பிள் விதையில் 0.3-0.35மி.கி வரையிலான சயனைடு ஆபத்தை விளைவிக்கும். மேலும் ஆப்பிள் விதையில் உள்ள சயனைடின் அளவு ஒவ்வொருவரின் உடல் எடைக்கு ஏற்றது போல வேறுபடும். ஆப்பிள் விதைகளை ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொண்டால் கோமாநிலை ஏற்பட்டு இறப்புகள் கூட நடைபெற வாய்ப்புகள் உள்ளது.

எச்சரிக்கை

ஆப்பிள் சாப்பிடும் முன்னர் அதன் விதைகளை முற்றிலும் அகற்றிவிட்டு சாப்பிடுவது நல்லது.அதன் விதைகளை அப்படியே சாப்பிட்டுவிட்டால் அதை வெளியில் உடனடியாக உமிழ்ந்துவிடுவது நல்லது.

Categories

Tech |