Categories
சினிமா தமிழ் சினிமா

வதந்திகளை யாரும் நம்பாதீர்கள்…. பிரபல சீரியல் நடிகை வேண்டுகோள்….!!!

பிரபல சீரியல் நடிகை ரேஷ்மா வதந்திகளை யாரும் நம்பாதீர்கள் என்று கூறியுள்ளார்.

பிரபல தொலைக்காட்சி சேனலான ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து செய்திகளும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இந்த சேனலில் பல வருடங்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியலான ‘பூவே பூச்சூடவா’ மிகவும் ஸ்வாரசியமாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரேஷ்மாவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

இதற்கிடையில் நடிகை ரேஷ்மா இச்சீரியலை விட்டு வெளியேற போகிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வந்தது. மேலும் அவர் நடித்த கதாபாத்திரத்தில் விஜய் டிவியின் நடிகை ஒருவர் நடிக்கப் போகிறார் என்றும் கூறி வந்தனர். இந்நிலையில் நடிகை ரேஷ்மா தனது சமூக வலைத்தள பக்கத்தில் தான் இந்த சீரியலை விட்டு விலகப் போவதில்லை என்பதை உறுதிப்படுத்தி வதந்தியை யாரும் நம்பாதீர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |