Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

காசுக்கு ஆசை படாதீங்க…! ”தமிழகம் தாங்காது” அதிமுகவை கிழித்தெடுத்த கமல் …!!

தமிழக அரசை மக்கள் நீதி மைய்யம் தலைவர் கமல்ஹாசன் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்திய அளவில் அதிகமான அளவுக்கு கொரோனா நோய் தொற்று பாதிக்கப்பட்ட மாநிலமாக தமிழகம் மூன்றாவது இடத்தில் இருந்து வருகிறது . அதேபோல அதிகமானோரை குணப்படுத்திய மாநிலம் என்ற வரிசையில் இரண்டாம் இடத்தில் இருந்த தமிழகம் தற்போது ஐந்தாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.  முதலில் தமிழக அரசு நல்ல முறையில் சுகாதார நடவடிக்கை மேற்கொண்டதாக பாராட்டப்பட்ட நிலையில் தற்போது தமிழக அரசின் சுகாதார, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் கேள்விக்குறியாகி உள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.

Kamal will face same fate as Sivaji Ganesan in politics, says ...

அதுவும் ஊரடங்கு காலத்தில், கொரோனாவில் அதிகம் பதிப்பட்ட மாநிலமாக உள்ள தமிழகத்தில் டாஸ்மாக் மதுக்கடைகளை திறப்பதற்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது அரசுக்கு கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது. மதுக்கடைகளை மூட சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ள தமிழக அரசின் நடவடிக்கையை அரசியல் கட்சிகள் கேள்விக்குள்ளாக்குகின்றனர்.

இந்த நிலையில் மக்கள் நீதி மைய தலைவர் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், முன்னேற்றத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டிய தமிழகம் பின்னடைவில் முதலிடத்தை நோக்கி நகர்கிறது. கொரோனா பாதிப்பில் 8ம் இடத்திலிருந்து 2ம் இடத்தை எட்டிப் பிடித்து விட்டது. காசுக்கு மட்டும் ஆசைப்பட்டு, மதுக்கடைகளை திறக்க நீதிமன்றத்தில் வாதாடிக் கொண்டிருக்கிறது அரசு. #தாங்குமாதமிழகம் என்று தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

Categories

Tech |