எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது வதந்தியே. காட்டுப் பகுதியில் இருந்த ஏராளமான முற்களால் கொஞ்சம் சிரமப்பட்டேன் என்று காயம் குறித்து உலா வரும் தகவலுக்கு நடிகர் ரஜினி விளக்கமளித்துள்ளார்.
காயம் ஏற்பட்டதாக வெளியான தகவல் வதந்தி என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
Man vs Wild படப்பிடிப்பு பந்திப்பூரில் நடைபெற்றது. அதை முடிந்துவிட்டு வருகிறேன். எனக்கு காயம் ஏற்பட்டதாக தகவல் வெளியானது. அப்படி எதுவுமில்லை. அது வெறும் வதந்தியே. காட்டுப் பகுதியில் ஏராளமான முற்கள் இருந்தன. அவைதான் கால்களில் குத்தின. வேறு எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்