பதினொன்றாம் வகுப்பில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தற்போது அறிவித்துள்ளார்.
+2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று காலை 9.30 மணி அளவில் வெளியாகின. வழக்கம் போல் தேர்வில் அதிக அளவிலான சதவிகிதத்தில் மாணவர் தேர்ச்சி என்பது இருந்தாலும், ஒரு சில மாணவர்கள் தேர்வில் தோல்வி அடைந்துள்ளனர். அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில், பிளஸ் 1 தேர்வில் வெற்றி பெறாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடத்தப்படும். பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் 12-ம் வகுப்பில் சேர்ந்து படித்துக்கொண்டே 11ஆம் வகுப்பில் தோல்வி அடைந்த தேர்வுகளை எழுதலாம் என தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு தோல்வியடைந்த மாணவர்களுக்கு ஊக்கத்தை அளிக்கும் படி இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.