Categories
சினிமா தமிழ் சினிமா

டி.என்.ஏ ரிசல்ட்… பாரதி-வெண்பா கல்யாணத்தில் ஏற்பட்ட சிக்கல்…. பரபரப்பான கதைகளத்தில் பாரதிகண்ணம்மா….!!!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல்களில் ‘பாரதி கண்ணம்மா’வும் ஒன்று இந்த சீரியல் பல வருடமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் பல வருடங்களாக ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்தா டிஎன்ஏ டெஸ்டிங் ரிசல்ட் வர உள்ளது. பாரதிகண்ணம்மா சீரியலில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு பெரியதாக தற்சமயம் கதை ஒன்றும் இல்லை, பாரதி கண்ணம்மாவும் சேர்ந்தாலே போதும் சீரியல் முடிந்துவிடும். ஆனால் அது எப்ப தான் நடக்கும் என தெரியலை என்று ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள். தற்போது இருவரும் சேர்வதற்கான சூழல் நிலவி வருகிறது.

அதாவது ஒரு புறம் ரோகித்தை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி மண்டபத்தில் இருந்து தப்பி சென்ற வெண்பா பாரதிய திருமணம் செய்ய பொன்னியம்மன் கோவிலுக்கு செல்கிறார். மறுபுறம் இந்த திருமணத்தை நிறுத்த கண்ணம்மா செல்கிறார். டிஎன்ஏ ரிசல்ட் வரா வராததால் குழம்பி நிற்கும் பாரதி, சரி கோவிலுக்கு போகும் அதுக்குள்ள ரிசல்ட் வந்துவிடு என அவரும் சொல்லி சொல்கிறார். இறுதியில் என்ன நடக்கப்போகிறது, இந்த கல்யாணத்தை கண்ணம்மா நிறுத்துவாரா? டி என் ரிசல்ட் வருமா? வெண்பாவின் நிலை என்ன எல்லாவற்றிற்கும் விடையாக வர உள்ளது அடுத்தடுத்த எபிசோடுகள். இறுதியில் என்னதான் நடக்கப்போகிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

Categories

Tech |