செய்தியாளர்களிடம் பேசிய தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பேரவை தலைவர் என்ன இறுதி முடிவு எடுத்தாரு? ஒரு நாற்பது எம்எல்ஏ திமுகவிலிருந்து வெளியே போயிடுறாங்க. இன்னைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தான் என முடிவு பண்ண முடியுமா ? சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை அடிப்படையில் தான் முதலமைச்சராக இருக்க முடியும். சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் எதிர்க்கட்சி தலைவராக இருக்க முடியும்.
ஆனால் இதை ஏற்க மறுக்கிறார். ஏனென்றால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை திராவிட முன்னேற்ற கழகம் அரசியல் ரீதியாக எதிர்க்க தெம்பு, திராணி இல்லை. கொள்ளை புறத்தின் வழியாக இன்றைக்கு பேரவை தலைவரை வைத்து எங்களை பழி வாங்குகிறார். தூத்துக்குடி சம்பவத்திற்கு யார் ஆணையம் அமைத்தது ? நாங்க தான் ஆணையம் அமைத்தோம். மாண்புமிகு அம்மா அவர்கள் மர்மமான முறையில் மரணம் அடைந்தற்கு யார் ஆணையம் அமைத்தது ? நாங்கள் தான் அமைத்தோம்.
நாங்கள் அமைத்ததற்கு விளக்கம் கொடுக்க வேண்டும் என்று அவசியமில்லை. இந்தி திணிப்பு என்பதற்கு வேறு வழியே இல்லை. இன்றைக்கு மக்கள் கொதித்துப் போய் இருக்கின்றார்கள், இந்த ஆட்சி எப்ப போகணும்னு பாத்துட்டு இருக்காங்க. அதற்கு சப்பக்கட்டு கட்ட தான் ஹிந்திய எதிர்ப்பை எடுத்து இருக்காங்க என தெரிவித்தார்.