தமிழகத்தில் திமுக, அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சமீபத்தில் வாக்குச்சாவடி முகவர்களுடன் காணொளி வாயிலாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அந்த வகையில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தின் போது தேர்தல் சமயத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் மற்றும் கூட்டணி அமைத்தல் போன்றவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கமல்ஹாசன் உதயநிதி ஸ்டாலினுடன் சமீப காலமாகவே நெருக்கம் காட்டுவதால் திமுக காட்சியுடன் வருகிற தேர்தலில் கூட்டணி அமைக்க போவதாக கூறப்படுகிறது. அதன் பிறகு திமுக மற்றும் காங்கிரஸ் ஏற்கனவே கூட்டணியில் இருக்கும் நிலையில் திமுகவுடன் இணைவதற்கு முன்பாக காங்கிரஸுடன் கூட்டணி அமைக்குமாறு முதல்வர் ஸ்டாலின் கமல்ஹாசனுக்கு அறிவுறுத்தியதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த அறிவுறுத்தலின் படிதான் கமல்ஹாசன் வருகிற 24-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் ராகுல் காந்தியின் பாதையாத்திரையில் கலந்து கொள்ள இருக்கிறாராம். மேலும் காங்கிரஸ், திமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் போன்ற கட்சிகள் கூட்டணி அமைப்பதாக வெளியான தகவல் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.