தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்தவர்களில் முன்னாள் முதல்வர்களான கலைஞருக்கும், ஜெயலலிதா அவர்களுக்கும் மிகப் பெரிய பங்கு உண்டு. எம்ஜிஆர் திராவிட முன்னேற்றக் கழகத்தை விட்டு பிரிந்து வந்ததற்கு பிற்பாடு அவர் மறையும் வரையில் மக்களுக்கான நலத்திட்டங்கள் பெரும்பகுதி திராவிட முன்னேற்றக் கழகம் சித்தாந்தம் அடிப்படையில் தான் இருந்தது.
ஒரு சில திட்டங்கள் மட்டுமே எம்ஜிஆரின் தனி பாணியில் செயல்படுத்தப்பட்டது. எம்ஜிஆரின் மறைவிற்குப் பின்பு அப்போதிருந்த ஆணாதிக்கத்தால் ஜெயலலிதா பெரிதும் துன்புறுத்தப்பட்டார். உதாரணமாக எம்ஜிஆரின் இறந்த உடலுக்கு அருகில் கூட அவரை எதிர் அணியினர் அனுமதிக்கவில்லை. அதேபோல், சட்டமன்றத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அப்போதிருந்த முதல்வர் கலைஞர் கருணாநிதியின் ஆதரவாளர்களால் கடுமையாக தாக்கப்பட்டு தலைவிரி கோலத்துடன் வெளியே வந்து நான் முதல்வரான பின்பு தான் மீண்டும் இந்த சட்டமன்றத்திற்குள் காலடி எடுத்து வைப்பேன் என்று சவால்விட்டு சென்றிருந்தார்.
இதனால் மக்கள் ஜெயலலிதா மீது பரிதாபம் காட்ட தொடங்கினர். இதுவே பின்னாளில் அவர் ஆட்சியை கைப்பற்ற காரணமாயிற்று. இதை தொடர்ந்து ஆட்சியை கைப்பற்ற திமுக தேர்தல் வாக்குறுதியாக இலவச கலர் டிவி வழங்கப்படும் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தேர்தலில் திமுக வெற்றியும் பெற்றது. தமிழகத்தில் இன்று இலவசம் என வழங்கப்படும் அனைத்திற்கும் முக்கிய முன்னோடியாக திகழ்பவர் யார் என்றால் அது கலைஞர் கருணாநிதி தான்.
முதன் முதலாக தமிழகத்தில் இலவச பொருளை அமல்படுத்தியது அவர்தான். பின்னாளில் அதற்கு போட்டியாக செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் மிக்ஸி, கிரைண்டர், லேப்டாப் என இலவசங்களை அள்ளி தந்தார். அம்மா உணவகம், இலவச ரேஷன், அம்மா மருந்தகம் என சலுகைகளை அள்ளி தந்தார்.
தற்போது ஜெயலலிதாவைத் தொடர்ந்து பொங்கலுக்கு இனாமாக ரூபாய் 2000 பரிசுத்தொகை என கூடுதலான இலவச திட்டங்களை தற்போது இருக்கக்கூடிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார்.தமிழக அரசியல் வரலாற்றில் இலவச பொருள்களின் வரலாறு இவர்களது ஆட்சிக்காலத்தில் இருந்து தான் தொடங்கியிருக்கிறது.