திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் மொத்தமாக திமுக கைப்பற்றியுள்ளது.
27 மாவட்டங்களில் கடந்த 27 மற்றும் 30 ஆகிய இரண்டு தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஜனவரி 2 ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் வெளியானது. இந்த நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சித் தலைவர், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர் உட்பட மொத்தம் உள்ள 10, 306 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. காலையில் இருந்தே சில இடங்களில் திமுக அதிமுகவினர் இடையே கலவரம் ஏற்பட்டு வருகிறது. தொடர்ந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
தற்போது மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகின்றது. மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளில் அதிமுக 14 இடங்களையும், திமுக 12 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் பதவிகளில் அதிமுக 155 இடங்களையும் , திமுக 133 இடங்களையும் கைப்பற்றியுள்ளது. இதில் திருச்சி மாவட்ட ஊராட்சி தலைவர் பதவி உட்பட 14 ஒன்றியக்குழு தலைவர் பதவிகளையும் மொத்தமாக திமுக கைப்பற்றியுள்ளது.