Categories
அரசியல் மாநில செய்திகள்

வழக்கு போடும் DMK… பயத்தில் EPS எடுத்த முடிவு… கொளுத்தி போட்ட டிடிவி ..!!

செய்தியாளர்களிடம் பேசிய அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அம்மாவின் தொண்டர்கள், விசுவாசிகள் அந்த இயக்கத்தில் அந்த சின்னத்திற்காகவும், கட்சியின் பெயருக்காகவும் அங்கு இருப்பவர்கள் இன்றைக்கு உணர்ந்து வருகிறார்கள். பழனிச்சாமி அந்த இயக்கத்தை அழிக்க வேண்டும் என்கின்ற சுயநலத்தோடு செயல்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

இன்றைக்கு இரட்டை இலையே செயல்படாமல் இருக்கிறது. ஏனென்றால் நான்கு மாதங்களுக்கு முன்பு நடந்த உள்ளாட்சி இடைத்தேர்தலில் யாருக்கும் சின்னம் ஒதுக்க முடியவில்லை. எடப்பாடி கூட இருந்து ஆட்சியை காப்பாற்றிய பன்னீர்செல்வத்தை, எடப்பாடி தான் வெளியேற்றி இருக்கிறார். வேறு வழியில்லாமல் பன்னீர்செல்வம் போராடிக் கொண்டிருக்கிறார்.

இன்று அந்த இயக்கம் நீதிமன்றத்திற்கு சென்று,  அந்த இயக்கத்தின் எதிர்காலமே நீதிமன்றத்தில் கையில் இருக்கிற மாதிரி செய்தது பழனிச்சாமி தான். முதலமைச்சர் பதவியில் நான்கு ஆண்டுகள் இருந்து ஆட்சி அதிகாரம் செய்தவர். அதனால் பல்வேறு பண பலத்தை பெற்றவர்கள், அந்த இயக்கத்தை அழிக்கும் விதமாக சுயநலத்தோடு செயல்படுகிறார். திமுக வழக்குகள் போட்டு விடக்கூடாது என்ற பயத்தில் இன்று அந்த கட்சியை அழிக்கின்ற நிலைமைக்கு போய்விட்டார்.

அதிமுகவை கட்சியை பலவீனப்படுத்தினால் திமுகவிற்கு தான் லாபம். அதற்கான பணிகளில் இறங்கிவிட்டார். எல்லோருக்கும் துரோகம், துரோகத்தை தவிர வேறு ஒன்றும் தெரியாமல் சுயநலத்தோடு சுயநலத்தின் உச்சத்தில் செயல்படுகிறார். அவருக்கு ஒரு வீழ்ச்சி வந்தால், அது அம்மாவின் இயக்கத்திற்கும், தமிழ்நாட்டிற்க்கும், ஜனநாயகத்திற்கும் ஒரு நல்லதொரு முடிவாக இருக்கும்.

Categories

Tech |