செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, தமிழ் காட்டுமிராண்டி மொழி, பொண்டாட்டி கிட்ட இங்கிலீஷ்ல பேசுன்னு சொன்ன ஈவேராவை புகழ்ந்து நீங்க பேசலாமா ? பேசினா நீங்க தமிழ் விரோதி தானே. கர்நாடகாவில் காங்கிரஸ்காரங்க சாக்க சுத்தி வைத்திருந்த திருவள்ளுவரை திறந்து விட்டது பிஜேபி. உண்மையை மறைக்காதீர்கள்.
பொய் பேசாதீங்க. திராவிடியன் ஸ்டாக் பூரா புளுகு மூட்டை. ஈவேரால ஆரம்பிச்சு, பொய் பரப்பி பரப்பி தமிழ்நாட்டு கெடுத்து கும்பல். தயவுசெய்து உங்ககிட்ட நான் கேட்டுக்குறேன்..காங்கிரஸ் ஆட்சியில் இருந்து வரைக்கும் திருவள்ளுவர் சிலை சாக்கு சுத்தி வச்சிருந்தது, நான் பல தடவை பார்த்திருக்கேன். ஆனால் பிஜேபி ஆட்சிக்கு வந்த உடனே திரு. எடியூரப்பா அவர்கள் அந்த சிலையை திறந்து வச்சாரு.
அதனால கர்நாடகாளையும் தமிழுக்கு ஆதரவா அது மட்டுமல்ல.. எடியூரப்பாவே அந்த உள்ளாட்சி தேர்தல்ல பெங்களூரில்… 18 தமிழ் வேட்பாளர்களை நிறுத்தி ஜெயிக்க வச்சாரு. அதனால பிஜேபிஎல்லாருக்குமான கட்சி. ஆனால் இந்த திராவிடயன் ஸ்டாக் தான் வெறுப்பு அரசியலின் மூலதனம். வெறுப்பு அரசியல், ஜாதி வெறுப்பு, மொழி வெறுப்பு, வடக்கு, தெற்கு வெறுப்பு என தெரிவித்தார்.