Categories
மாநில செய்திகள்

“முறைகேடுகளை மூடி மறைத்து”… குற்றவாளிகளைக் காப்பாற்ற எடப்பாடி அரசு முயற்சி” – மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

“முறைகேடுகளை மூடி மறைத்து, குற்றவாளிகளைக் காப்பாற்ற எடப்பாடி அரசு முயற்சி செய்வதாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டியுள்ளார்.

டிஎன்பிஎஸ்சி நடத்திய குரூப்-4 தேர்வு மற்றும் குரூப்-2 தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் அதிரடியாக  ஆயுதப்படை காவலர் சித்தாண்டி உட்பட 20-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இப்படி அடுத்தடுத்து கைது நடவடிக்கையால் தமிழகமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. அதை தொடர்ந்து  தற்போது 2016- ஆம் ஆண்டு நடந்த VAO தேர்வு குறித்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசார் TNPSCயிடம் கேட்டுள்ளனர். இதிலும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை ராயபுரத்தில் உள்ள ஒரு தனியார் மணடபத்தில் சென்னை வடக்கு மாவட்ட துணை செயலாளர் இளைய அருணாவின் மகள் திருமணத்தை திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தி வைத்தார். பின்னர் திருமண நிகழ்ச்சியில்  பேசிய ஸ்டாலின், தமிழக அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் நடந்த ஊழல்கள் குறித்த செய்திகள் தினமும் நாளிதழ்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் “முறைகேடுகளை மூடி மறைத்து, ஆளும்கட்சிக்கு சார்பாக ஆட்டம் போட்ட அடாவடி குற்றவாளிகளைக் காப்பாற்ற எடப்பாடி அரசு முயற்சி” செய்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.

Categories

Tech |