Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

BRAKING: திமுக பிரமுகர் தன்னை தானே சுட்டு தற்கொலை… அதிர்ச்சியில் தொண்டர்கள்…!!

நாமக்கல்லில் திமுக பிரமுகர் ஒருவர் துப்பாகியல் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல்லில் திமுகவின் மேற்கு மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளராக இருந்தவர் டாக்டர் ஆனந்த். இவர் அதே பகுதியில் மருத்துவமனை அமைத்து மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளித்து வந்துள்ளார். இவரது மனைவி தனியார் கல்லூரி ஒன்றில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவ்வாறு இருக்கையில் சில நாட்களாகவே ஆனந்த் மிகுந்த மன உளைச்சலுடன் சோகமாக இருந்துள்ளார்.

Image result for தன்னை தானே சுட்டு தற்கொலை

இதனை கண்ட அவரது உறவினர்கள் மற்றும் மனைவியார் அவரிடம் கேட்க அவர்களிடம் எந்த பதிலும் கூறவில்லை. இந்நிலையில் அவரது மனைவி இன்று காலை உறவினர் வீட்டிற்குச் செல்ல தனது வீட்டில் உள்ள நாட்டு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு நாமக்கல் மாவட்டம் செங்கம் பள்ளி கிராமத்திற்கு சென்ற அவர், ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வைத்து துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Image result for தன்னை தானே சுட்டு தற்கொலை

சத்தம் கேட்ட ஊர் மக்கள் விரைந்து சென்று பார்க்க அவர் இறந்து கிடந்துள்ளார். பின் காவல்நிலையத்திற்கு தகவல் அறிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அவரது உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின் தற்கொலைக்கான காரணம் குறித்து விரிவான விசாரணையை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |