துரைமுருகனுக்கு எங்களுக்கு அறிவுரை கூறும் தகுதி தகுதி இல்லை என என்றும் அந்த அறிவுரையை ஸ்டாலினுக்கு தான் முதலில் கூற வேண்டும் என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது, “எங்களுக்கு அறிவுரை கூற துரைமுருகனுக்கு என்ன தகுதி உள்ளது, முதலில் அவருடைய அரசியல் பாரம்பரியம் என்ன ? பேரறிஞர் அண்ணா இருந்தவர், டாக்டர் கலைஞர்ரோடு பின்னிப்பிணைந்து இருந்தவர்.
இன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடுத்த தலைவர் யார் வந்திருக்கணும் துரைமுருகன் தானே வந்திருக்க வேண்டும். அந்த அறிவுரையை முதலில் இன்று தலைவராக இருக்கும் ஸ்டாலினுக்கு கூறவேண்டும்” என கூறினார்.