Categories
அரசியல் மாநில செய்திகள்

DMK சொல்லுறத செய்யாது… ஏமாந்து ஓட்டு போட்ட மக்கள்…. என்ன செய்யனு முழிச்சுகிட்டு இருக்காங்க…!!

செய்தியாளர்களை சந்தித்த ஜான் பாண்டியன், DMK சொல்வதை மட்டும் தான் செய்ய மாட்டாங்க. சொன்னதை இதுவரை செஞ்சது இல்லை, அதுதான் திமுக. என்ன செஞ்சிருக்காங்க ? சொல்லுங்க. வாக்குறுதிபடி ஏதாவது எஞ்சோம்னு ஒன்னு சொல்லுங்க,  நான் ஏத்துக்கிறேன். ஒண்ணுமே இல்லையே.  மக்களுடைய மனநிலையை புரிந்து அன்னைக்கே தேர்தல் வாக்குறுதி அது, அவ்வளவு தான். மக்கள் ஏமாந்து ஓட்டு போட்டு இன்னைக்கு முழிச்சிட்டு இருக்காங்க, இதுதான் உண்மை.

இந்த மாதிரி வாக்குறுதிகள் பொய்த்து போகாமல் உண்மையான வாக்குறுதிகளை சொல்லி மக்கள்கிட்ட வாக்குகள் சேகரிக்கணும்கிறது  தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினுடைய வேண்டுகோள். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு 10 %  இடஒதுக்கீட்டுக்குஎதிர்ப்பு தெரிவிக்கின்றோம். 10 % சுப்ரீம் கோர்ட் உத்தரவை நான் வன்மையாக கண்டிக்கிறேன் என்று சொல்லி ஏற்கனவே ஸ்டேட்மெண்ட் கொடுத்து இருக்கேன்,

ட்விட் எல்லாம் போட்டு இருக்கேன். ஜனத்தொகையின் அடிப்படையிலே,  விகிதாச்சார அடிப்படையிலே %  கொடுங்கன்னு நாங்க முன்னாள் இருந்து கேட்டுட்டு இருக்கோம், அதுதான் நியாயமானதும் கூட.  எல்லா ஜாதி தலைவர்களும் ஜாதி அடிப்படையில் எவ்வளவு விகிதாச்சாரம் இருக்குன்னு,  ஜாதிகளின் அடிப்படையில் கணக்கெடுத்தால் மட்டும் தான் அதன் உண்மை நிலையை புரிந்து கொள்ள முடியும். அதன் அடிப்படையில் விகிதாச்சாரம் கொடுக்கணும் என தெரிவித்தார்.

Categories

Tech |