அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் நிர்வாகி புகழேந்தி, பிரபல யூடியூப் சேன்னலில் பேசும் போது, திமுகவினுடைய செயல்பாடுகள் என்னைப் பொருத்தவரை இந்த நிமிடம் வரை, பெரிதளவு ஒன்றும் இங்கே குறை சொல்வதற்கு இல்லை. 13 பேரை தூத்துக்குடியில் சுடவும் இல்லை, அதேபோன்று பல விஷயங்களில் கோட்டை விட்டதும் இல்லை, 10.5 % இடஒதுக்கீட்டுக்கு ஒரு ஜி.ஒ போட்டு கோட்டை விட்டார்கள்.
அம்மா வீடு இவ்வளவு காலம் பேசிக்கொண்டிருந்தோம் போயஸ் தோட்டம், அது ஒரு ஜி.ஒ போட்டார்கள் அதுவும் போச்சு. ஆக இப்படிப்பட்ட குறைபாடுகளோடு இருந்த முதலமைச்சர் தான் வேறு வழி இல்லாமல் ஒரு நான்காண்டு காலம் இதை தள்ளிக்கொண்டு போய் விட்டார். தள்ளியவர்கள் பின்னால் இருந்த சட்டமன்ற உறுப்பினர்கள், அங்கு இருந்த அமைச்சர்கள் அதற்காக எவ்வளவு சுரண்ட வேண்டுமோ சுரண்டி விட்டார்கள், அது நடந்து விட்டது.
ஆகவே இங்கே வந்து அது மாதிரி நிகழ்வுகள் இதுவரை நடக்கவில்லை, நடந்தால் தவறு யார் செய்தாலும் தவறுதான், திமுக செய்தாலும் தவறுதான் அண்ணா திமுக செய்தாலும் தவறுதான் அது நடைமுறைக்கு ஒவ்வாத ஒன்று. அதை நாம் எதிர்ப்போம் தவறில்லை. ஆனால் இப்படி இதுவரை இந்த அரசின் மீது பெரிய குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை மக்கள் பாராட்டுகின்ற நிலையில்தான் இருக்கிறார்கள் என தெரிவித்தார்.