வருகிற 2024 நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாஜக சார்பில் கோவை, நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட முகவர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் தேர்தல் பிரசார கூட்டம் நேற்று மாலை மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது. அப்போது நடைபெற்ற பாஜக கூட்டத்தில் பேசிய நட்டா, திமுக மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
இதுகுறித்து, DMKவில் வரும் D என்பது Dynasty வாரிசு அரசியல், M என்பது Money. அவர்களுக்கு பணம் மட்டுமே குறிக்கோள். K என்பது கட்டப்பஞ்சாயத்து. திமுக என்றாலே கட்டப்பஞ்சாயத்துதான் என்று திமுகவிற்கு புது விளக்கம் கொடுத்தார். மேலும், தமிழகம் பாதுகாப்பான கைகளில் இல்லை என்றும் விமர்சித்தார் நட்டா.