Categories
அரசியல் மாநில செய்திகள்

டி.ஜெக்கு வந்த திடீர் கால்…! போட்டோ அனுப்பி ஷாக்… 3.75 கோடி எங்கே ? என சுளீர் கேள்வி …!!

செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பெட்டிஷன் வாங்குவதற்கு கூட ஆள் இல்லை. அப்படி இருக்கிற அரசாங்கம் தான் இன்னைக்கு இருந்துகிட்டு இருக்கு. ஒரு பெட்டிஷன் கொடுக்க செல்லும் போது ஆள் இல்லை. தேர்தல் நேரத்துல ஊர் ஊரா போறாரு.  போய் என்ன சொன்னாரு ? நான் ஒரு கார்ட் கொடுப்பேன், அதை காட்டி நேராக என்னை பார்க்கலாம் அப்படின்னு சொன்னாரு. எத்தனை பேரு சிஎம்மை பார்த்தீங்க ?  சிஎம்மை சேம்பர்ல நீங்க யாராவது பார்த்தீர்களா ?  பார்க்க முடியாது.

சி.எம் செல்லுல கொடுத்த எத்தனை பெட்டிஷனுக்கு இதுவரைக்கும் செட்டில் ஆகி இருக்கு ? அதுவும் ஒன்னு செட்டில் ஆகல, அப்படியே கிணத்துல போட்ட கல்லு மாதிரி இருக்கு. சி.எம் செல்லில் கோரிக்கை மனு கொடுத்து, அந்த கோரிக்கை தொடர்பாக வருவது எல்லாமே பொய்யான தகவல். காலைல ஒருவர் என்கிட்டே பேசினார். சார் தயவு செய்து பேசுங்கள் என்று சொன்னார்.

நாவலூர் டு தாழம்பூர் பகுதியில் சாலை போடணும்னு சிஎம் செல்லுக்கு பெட்டிஷன் போட்டு இருக்காரு. உடனே உங்களுக்கு ஆய்வு எல்லாம் செய்து,  மூணே முக்கோடி ஒதுக்கி ஆச்சுன்னு சொன்னாங்க. உடனே அவரு, சந்தோஷப்பட்டாரு. அப்புறம் பார்த்தால் திடீர்னு,  ஒரு ரிப்ளே  பெட்டிஷன்ல ரோடு போட்டாச்சுன்னு இருக்கு.

சாலையே போடல. ஆனா என்ன ஆச்சுன்னா ? அங்க சாலை போட்ட மாதிரி ஒரு போட்டோ போட்டு,  அதை காமிச்சு இருக்காங்க. இப்படி ஒரு சாலை போடாம,  சிஎம் செல்லிலே இப்படி மக்களை ஏமாற்றுகின்ற   விஷயத்தை இன்னைக்கு பண்ணுறாங்க.  அவரே இன்று கால் செய்து  ரொம்ப வருத்தமா சொன்னாரு. சாலை தண்ணீ, சேரும்சகதியுமா  இருக்கிறது சார்.

என்னுடைய வாகனத்திற்கு மாதம் 10,000 இப்படி சாலையால் செலவு பண்ண வேண்டிய நிலைமை இருக்கு. ஆனால்  சாலை போட்ட மாதிரி இவங்க சொல்றாங்க. 3.75 கோடி ஒதுக்குன மாதிரி சொல்லுறாங்க. 3.75 கோடி எங்கே போச்சு ? என கேள்வி எழுப்பினார்.

Categories

Tech |